பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி-பிரேமலதா விஜயகாந்த்..?

It has been reported that he spoke of an alliance only with a non-partisan party.

இன்று தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி, மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என அவர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இவர்களின் 31-வது திருமண நாளாகும். இந்த திருமண நாள் கொண்டாட்டம் வழக்கமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொண்டாப்பட்டு வருகிறது. அதனால், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி-பிரேமலதா விஜயகாந்த்..?