#LIVE: உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் – ஆணையர் சுஷில் சந்திரா..!

உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைப்பெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா,

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பேரவை ஆயுட்காலம் மார்ச் 15 முதல் மே 14-க்குள் முடிவடைகிறது.

5 மாநில தேர்தலில் மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள்

அவர்களில் 24.98 லட்சம் பேர் முதல் முறை வாக்கு செலுத்தும் வாக்காளர்கள்

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1250 முதல் 1500 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு

வாக்காளர்களுக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் கொரோனா பரவாமல் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

கோவா, மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் மொத்தம் 690 சட்டமன்ற தொகுதிகளுக்கு இந்த முறை தேர்தல் நடைபெறும்

உத்தரபிரதேசம் 403 தொகுதிகளையும், பஞ்சாப் 117 தொகுதிகளையும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளையும், மணிப்பூர் 60 தொகுதிகளையும், கோவா 40 தொகுதிகளையும் கொண்டது.

5 மாநில தேர்தலில் வாக்களிக்க உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு

சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் முறைகேடுகளை பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளிக்க முன்வரவேண்டும்.

இ- விஜில் என்ற செயலியில் புகார் தெரிவிக்கலாம்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.

மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும்.

வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் தொடர்பான விரிவான தகவல்களை அரசியல் கட்சிகள் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றுவது கட்டாயம்.

வேட்பாளரை தேர்வு செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம்.

தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.

தேர்தல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக வகைப்படுத்தப்படுகின்றன இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் போட நடவடிக்கை எடுக்கப்படும்.

பதட்டம் நிறைந்த வாக்கு மையங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.

தேர்தலை காரணம் காட்டி, மதுவோ அல்லது பணமோ அன்பளிப்பாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை தள்ளிவைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் என்றவரை டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.

5 மாநில தேர்தலில் வாக்களிக்க நேரம் ஒரு மணி நேரம் அதிகரிப்பு.

ஜனவரி 15 வரை தேர்தல் தொடர்பான எந்த பேரணிகளுக்கும் அனுமதி கிடையாது.

நடைப்பயணம், சைக்கிள் பேரணி ஆகியவற்றிற்கு ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

#LIVE: உ.பி உட்பட 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் – ஆணையர் சுஷில் சந்திரா..!