பொள்ளாச்சி பாலியல் வழக்கு- நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

Pollachi sex case adjourned till November 2 by Coimbatore Women's Court.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு நவம்பர் 2-ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிமுக பிரமுகர்கள் உள்பட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பேரும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர். சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண் குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து ஈரோடு சிறையில் உள்ளனர். தற்போது இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை நவம்பர் 2-ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரணையில் காணொளி மூலம் திருநாவுக்கரசர் ,சபரி ராஜன் உள்ளிட்ட ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு- நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!