பொள்ளாச்சி பாலியல் வழக்கு நவம்பர் 2-ஆம் தேதிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிமுக பிரமுகர்கள் உள்பட திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன். பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் […]
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி. கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய வரும் சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.அதாவது கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்தனர் சுமார் 20-க்கும் நபர்கள் கொண்ட கும்பல். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர்(சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார்) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் […]