இன்றுடன் காவல் முடிவடைகிறது ! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்  ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரம் நீதிமன்றக்காவல் முடிவடைய உள்ள  நிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரம் நீதிமன்றக்காவல் முடிவடைய உள்ள  நிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை  சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது .அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர்  24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.மேலும் அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.காவல் முடிந்த நிலையில் சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.  ப.சிதம்பரத்திடம் அக்டோபர்  30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது .இன்றுடன் அந்த காவல் முடிவடைய உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.