வரும் 12 ஆம் தேதி செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

PM Modi to inaugurate Central Institute of Classical Tamil Studies on January 12!

சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி,காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

சென்னையின் பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை வரும் 12 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். காணொலியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.