சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி,காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். சென்னையின் பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடியில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை வரும் 12 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். காணொலியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் […]
தமிழகம்:சாதி-மத சீரழிவுப் போக்குகளைச் சில அரசியல் சக்திகள் ஊக்குவித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக இருந்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற திரைக் கலைஞர் ஒருவர் தனக்குள்ள புகழையும் செல்வாக்கையும் எவ்வாறு எளிய மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் சூர்யா ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குவது போற்றுதலுக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது” ‘கலைநாயகன்’ சூர்யா: […]
மனிதத்தைக் கொன்று மதத்தை வளர்க்கத் துடிக்கும் பேராபத்துமிக்க பாஜக அரசின் அநீதிக்கெதிரான நீதியை நிலைநாட்ட ஒவ்வொரு குடிமகனும் முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி,ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான […]
தவறான பொருளாதாரக் கொள்கையாலும்,பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்றுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் பெரும் தாக்கம் காரணமாக கட்டுமானப் பொருட்கள்,பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது.அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது பல இடங்களில் சதம் அடித்துள்ளது. இந்நிலையில்,பெட்ரோல் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியிருப்பதாவது: வரலாறு காணாத விலை: “வரலாறு […]