#BREAKING: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை..!

Prime Minister Modi is holding consultations with the Chief Ministers of 6 states including Tamil Nadu through video.

தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொளி ஆலோசனையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களில் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிகிறார். தளர்வுகளால் கொரோனா மேலும், அதிகரிக்காமல் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்திற்கு சிறப்பு தொகுப்பாக ஒரு கோடி தடுப்பூசி தர முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.