தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.
தமிழ் புத்தாண்டை மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதிகாரபூர்வ அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்களே குடிமக்களின் தனித்துவத்தைக் கேலிசெய்யும் விதமாகப் பேசிப் பார்க்கும் கொடுங்காலம் இது. நம் தனித்துவம் நம் மொழி. அதன் அடையாளமாக தமிழ்ப் புத்தாண்டை மேலதிக உற்சாகத்தோடு கொண்டாடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node