ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது என சரத்குமார் பேட்டி.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிவுப்பூர்வமானது: உலகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடப்படுகிறது.
ரம்மி விளையாட்டு விளையாட திறமை அவசியம். குடும்பத்தகராரில் தற்கொலை செய்து கொண்டவர்களை ஆன்லைன் ரம்மிக்காக தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர். ஆன்லைன் ரம்மிக்கு தடை வருவதற்கு முன்பே நான் விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.