ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம் – காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி என்பது… மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என ஜெயக்குமார் ட்வீட்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசர சட்டத்திற்கு கடந்த மாதம் 26ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அவசர சட்டத்திற்கு தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தை தடைவிதிக்க கோரிய அவசர சட்டம் – காலம் தாழ்த்தி வழங்கப்பட்ட நீதி என்பது… மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.’ என ட்வீட் செய்துள்ளார்.