"ஒரே பூமி;ஒரே ஆரோக்கியம்" – ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்...!

"One Earth; One Health" - Prime Minister Modi's slogan at the G7 conference

பிரிட்டனில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் நேற்று காணொளி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி,’ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

பிரிட்டனில் ஜி7 மாநாடு காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி,”கொரோனா வைரஸ் தொற்றை வெல்வதற்கு இந்திய அரசும்,தொழில்துறையும்,மக்களும் இணைந்து போராடி வருகிறோம்.

எனவே,கொரோனா தடுப்பு பணிகள் குறித்து,வளரும் நாடுகளுடன் இந்தியாவின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மேலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த,அறிவுசார் காப்புரிமை தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல்,இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களின்,விநியோகத்தில் கட்டுப்பாடுகள் இருக்க கூடாது.

இதனைத்தொடர்ந்து,உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும்.அதற்கு ‘ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்’ என்ற கோட்பாட்டின் தேவை  அவசியம்”,என்று வலியுறுத்தினார்.