திமுக ஆட்சி அமைந்ததும் தமிழக மக்களின் கவலைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படும் -ஸ்டாலின்

Once the DMK is in power, all the worries of the people of Tamil Nadu will be completely removed - Stalin

மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத்  விரும்புகிறேன் என்று  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை  தொகுதியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி. அந்த உறுதிமொழியின்படி அமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கி இருக்கிறேன் என்று பேசினார்.