ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஓபிஎஸ் ட்வீட்
நாளை நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் ரமலான்திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்தநல்வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.
ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, நல்லதை மட்டுமே மனதில் நிலைநிறுத்தி, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன் ஈகைத் திருநாளாம் “#Ramazan” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் எனது அன்பார்ந்த #RamadanMubarak நல்வாழ்த்துகள்!
— O Panneerselvam (@OfficeOfOPS) May 2, 2022