புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை.!

NR in Puducherry in the first round of voting. The Congress-led coalition is leading in 9 seats.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 9 இடங்களில் முன்னிலை.

புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் அதிமுக, பாஜக இடையே கூட்டணியும், திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணியும், மற்றும் அமமுக தனித்தும் இந்த தேர்தலில் களம்கண்டுள்ளது.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 இடங்களும், திமுக, காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.