இப்போ இல்லைனா எப்போவும் இல்லை – இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!

With Rajini announcing that politics is coming, Rajini's hashtag is a trend in India now or neve, Celebrating fans

ரஜினி அரசியல் வருவதாக அறிவித்துள்ள நிலையில், இப்போ இல்லைனா எப்போவும் இல்லை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் ஹாஸ்டேக்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் வெகு காலமாக காத்திருந்தனர். இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தான் ஜனவரி மாதத்தில் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான திகதியை டிசம்பர் மாதம் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ஹாஸ்டேக்குகள் பதிவிட்டுள்ளார்.

அதில் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற ஹாஸ்டேக் தற்பொழுது இந்திய அளவில் முதலிடத்தில் டிரண்டிங்கில் உள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பால் ஏற்கனவே இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வரும் ரசிகர்கள், தற்பொழுது ரஜினியின் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உள்ளனர்.

இப்போ இல்லைனா எப்போவும் இல்லை – இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்!