அமைச்சரவையில் இடம் கிடைக்காதது வருத்தம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்

Chepauk MLA Udayanithi Stalin said he was not sorry for not getting a seat in the cabinet.

அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வருத்தம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமிழகத்துக்கு தேவையான ஒரு முக்கியமான விஷயம் நடைபெற்றுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தலைவர், அமைச்சர்கள், சட்டமனற்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தோழர்கள் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள் என கூறினார். அமைச்சரவை பட்டியலில் உங்கள் பெயர் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது உங்கள் பெயர் அதில் இடம் பெறவில்லை, இதனால் ஏதும் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்து முக ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.