ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் – பேரவையில் இன்று மசோதா தாக்கல்

New university in Jayalalithaa's name - The bill was tabled in the Assembly today

ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து  நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் , பதிலுரையும் நடைபெறுகிறது.மேலும் சட்ட முன் வடிவுகள் ஆய்வு செய்தலும் , நிறைவேற்றுதலும் நடைபெறுகிறது.

இந்நிலையில்விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர்ஜெயலலிதாபல்கலைக்கழகம் உருவாக்க சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.