கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் நல்லகண்ணு

Nallakannu returned home after recovering from Corona

கொரோனா தொற்றிலிருந்து இருந்து மீண்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு.

96 வயதான முதுபெரும் தலைவரான நல்லகண்ணு கடந்த வாரம் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் அவர் உடல் நல்ல முன்னேற்றம் கண்டு நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

எனினும் மருத்துவர்கள் அடுத்த பத்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.நல்லகண்ணு கடந்த  26 நாட்களுக்கு முன்னர்தான் கொரோனாவுக்கான  முதற்கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.