வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாக இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்ககைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் மற்றும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று நிலைமை இருக்கிறது. இந்த நிலையில், வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை என்றும் ஆனால் இதுதான் நிதர்சனம் எனவும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மோசமான […]
தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு தினமும் 2 லட்சம் கொரோனா தடுப்பூசி போட இலக்கை சுகாதாரத்துறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதை தொடர்ந்து, நாள் ஒன்றுக்கு 1.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில், கொரோனா பரவலை […]
கொரோனா தொற்றிலிருந்து இருந்து மீண்டார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு. 96 வயதான முதுபெரும் தலைவரான நல்லகண்ணு கடந்த வாரம் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் அவர் உடல் நல்ல முன்னேற்றம் கண்டு நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். எனினும் மருத்துவர்கள் அடுத்த பத்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.நல்லகண்ணு கடந்த 26 நாட்களுக்கு முன்னர்தான் கொரோனாவுக்கான முதற்கட்ட தடுப்பூசியை செலுத்திக் […]
தமிழகத்தில் இன்று மட்டும் 1,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,035 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 8,12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 292 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,23,799 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள்: தமிழகத்தில், கொரோனாவால் இன்று 12 பேர் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மாதங்களுக்கு மேலாக மக்கள் சிரமப்பட்டனர்.மேலும் உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், […]
தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதன்காரணமாக, அரசு விரைவு பேருந்துகளில் சராசரியாக […]
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்தது. அண்டை மாநிலங்களில் […]
ஊரடங்கு தொடருமா என்பதை, பிரதமர் மோடியும் , முதலமைச்சர் பழனிசாமியும் தான் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை இருந்த ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் இதன் பின் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கு இடையில் நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து […]