என்னை அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...!

உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில வாரங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு, கடந்த 3-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனை அடுத்து, இவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள நிலையில், இது தொடர்பாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன எனது உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node