ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது என எம்பி கனிமொழி பேச்சு. தூத்துக்குடி திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்பி கனிமொழி அவர்கள் உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடிய ஆளுநரை சிறப்பாக செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிமுகவுக்கு சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது. உங்களை நினைத்து வருத்தப்படுகிறோம் என விமர்சித்துள்ளார்.
பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு. வேலூரில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சாதியாக இருந்தாலும் மொழியாக இருந்தாலும் இந்த சமூகம் திணித்துக் கொண்டேதான் இருக்கும். பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது என கனிமொழி பேட்டி. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பது அரசின் நிலைப்பாடு; தமிழ் நமது அடையாளம். தமிழகத்தில் எந்த மொழியையும் திணிக்க முடியாது. மேலும், பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அல்ல; அது அலங்காரமாக இருந்தாலும் சரி, […]
ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகையில்,ஒரு பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம்தான். இத்தகைய சூழலில் கனிமொழி பதவிக்கு வந்துள்ளார்.’வாரிசு அரசியல்’ என்று அடையாளமாகிப் போய்விடுமோ என சந்தேகம் வருகிறது. காரணம் தலைவர் அண்ணன், துணைப் பொதுச் செயலாளர் தங்கை. […]
தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது என கனிமொழி எம்.பி ட்வீட். முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. இதுகுறித்து கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தலைவர் கலைஞர் தன் மூத்த பிள்ளையாய்க் கொண்டாடிய முரசொலி, இன்று 80 ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறது. அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் […]
மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட். இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து, அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று. இது போன்ற வன்முறைகள் நடக்காதவாறு அனைத்து வழிகளிலும் கவனத்துடன் செயல்படுவோம். இதை முற்றிலும் ஒழிக்க, இது குறித்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி என்ற பெண்ணுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசளித்த கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி, இவருக்கு சைக்கிள் மீது சிறுவயதில் இருந்து ஆர்வமுடன் இருந்து வந்தார். இதன் காரணமாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில், இஸ்ரேலில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் “உலக […]
உயிரிழந்த தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம் என கனிமொழி எம்.பி ட்வீட். தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 4-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடியில் தங்கள் மண்ணுக்காகவும், […]
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் ட்வீட். இன்று நாடுமுழுவதும் உலக சுற்றுலா தினம் அனுசரிக்கப்படும் நிலையில், இந்த தினத்தை முன்னிட்டு, கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில்,உலக சுற்றுலா தினமான இன்று,நம் சுற்றுலா தளங்களை பாதுகாப்பாக வைப்பதோடு,சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். […]
பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் குழந்தை திருமணங்களின் காரணங்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். 2020-ஆம் ஆண்டு சமூகநல இயக்குனகரத்தின் ஆர்டிஐ தரவின்படி, தமிழ்நாட்டில் 42% குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து […]
உலக புகைப்பட நாளில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இன்று உலகம் முழுவதும் ‘உலக புகைப்பட நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், கனிமொழி எம்.பி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி எம்.பி.அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், கலைஞர் கருணாநிதி அவர்கள் கேமராவுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, இந்த உலக புகைப்பட தினத்தில், இந்த புகைப்படம் பல நினைவுகளைத் தருகிறது. உலகின் நினைவுகளை படம்பிடிக்கும் அனைத்து […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை, என்ற தமிழ் நாடு அரசின் முடிவிற்கு நன்றி. கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனையடுத்து, வேதாந்தா […]
நடிகர் பத்மஸ்ரீ. விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், கனிமொழி […]
கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். தமிழகம் முழுவதும் காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் […]
உடல் நலம் குறித்து, அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மக்களவை உறுப்பினரும், திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில வாரங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இவருக்கு, கடந்த 3-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து, இவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை […]
திமுகவினர் மீது நீ கை வைத்து பார். உங்கள போல் நாங்கள் எத்தனை பேரை பார்த்துவிட்டு வந்திருப்போம். அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பிரச்சாரத்தின் போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை அடித்து பல்லை உடைத்து விடுவேன் என்றும், திமுக-காரனை எச்சரிக்கை செய்து விட்டு செல்கிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது கர்நாடகா முகம். அதை […]
தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி.மு.கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு […]
ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் பாலுவை சரக்கு லாரியை ஏற்றி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழக்தையே உலுக்கி உள்ள நிலையில், இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மையானது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், முக்கிய குற்றவாளிகளான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, சிபிஐ […]
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி.தலைமையில் மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு. மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி இந்த மாதத்தில் மட்டும் 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் விலையை குறைக்குமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து […]