ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என உரைத்தவர் முத்துராமலிங்க தேவர் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

Union Minister L. Murugan has said that Muthuramalinga Thevar was the one who described spirituality and politics as two eyes.

ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என உரைத்தவர் முத்துராமலிங்க தேவர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 114 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் ஜெயந்தி இன்று. தேசத் தொண்டு, தமிழ்த்தொண்டு, சமயத் தொண்டு, அரசியல் தொண்டு என எல்லாவற்றிலும் ஒரு சேர பயணித்து மக்களுக்காக குரல் கொடுத்த ஐயா அவர்களை வணங்கி போற்றுவோம் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node
ஆன்மிகமும் அரசியலும் இரு கண்கள் என உரைத்தவர் முத்துராமலிங்க தேவர் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!