தோழர் தா. பாண்டியன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர், மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
unknown node