Election2024 : கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஜோதிமணி பிரச்சாரம் செய்கையில் தனது அம்மாவை நினைத்து அழுதுவிட்டார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நேற்று தனது சொந்த ஊரான அறவன்குறிச்சி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் . அப்போது பேசுகையில் மறைந்த தனது தாய் நினைவு வந்து கண்ணீர் விட்டு அழுதார் . அவர் பேசுகையில் , சிலிண்டர் விலை 300 இருந்தது 1000 ரூபாய் ஆகிவிட்டது […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன? என்றும் இதன் பின்னணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாரா? எனவும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், பிவி ரமணா, எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி ஆகிய 4 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, ஆளுநர் […]
கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கரூரில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் நான்கு பேர் மரணமடைந்த துயரநிகழ்வில் […]
தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது என ஜோதிமணி ட்வீட். கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் இப்போது நிற்கும் இந்த தமிழ்நாடு, யோகிகளாலும் சித்தர்களாலும் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மமே இந்த பாரதத்தின் அடையாளம் என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு யோகிகளால் அல்ல சங்ககாலம் தொட்டே எமது தமிழால் உருவாக்கப்பட்டது. […]
மனுநீதியும்,பாஜகவும் மனிதகுல விரோதிகள் என ஜோதிமணி எம்.பி ட்வீட். திமுக எம்.பியும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இந்துக்கள் மற்றும் சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியது கடும் சர்ச்சையான நிலையில், ஆ.ராசாவின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்து அமைப்பினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல. மனுநீதியே. மனுநீதி பெண்களை […]
நரேந்திர மோடியை காப்பாற்ற வேண்டிய கடமை சீமானுக்கு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்வீட். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை விமர்சித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ 50 வருடத்தில் ஆண்டு ஏற்படுத்த முடியாத ஒற்றுமையை ஒருவர் 5 மாதங்கள் நடந்து எப்படி ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இது வேடிக்கையாக இல்லையா? காலையும் ,மாலையும் அவர் மேற்கொள்வது நடை பயிற்சியே, இதில் என்ன தேச ஒற்றுமை இருக்கிறது என […]
விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் என ஜோதிமணி எம்.பி ட்வீட். இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். 3வது நாளான இன்று நடைபயணத்தை இன்று காலை 7 மணிக்கு தொடங்கினார். சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் […]
தேசிய கொடி இயக்கம் மூலமாகவும் பிரதமர் மோடி காசு பார்க்கிறார் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். வரும் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசப்பற்றிற்கும், பாஜகவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே எதற்கு இந்த தேசியக்கொடி இயக்கம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதிலும் காசு பார்க்கிறார் மோடி! அவமானம்.’ […]
காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று தொடங்கிய மக்களவையில் அதே சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக […]
பாஜகவுக்குத் தெரிந்ததெல்லாம். பிரிப்பது மட்டும் தான் என ஜோதிமணி எம்.பி ட்வீட். நேற்று திமுகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ஆந்திரா,தெலுங்கானா போன்று நிர்வாக வசதிக்காக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என இனி போராட்டம் நடைபெறலாம்.ஆகவே, தமிழகத்தை இரண்டாக பிரிக்க முடியாது என நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி […]
பாஜக தலைவர்கள் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரையும் சந்திக்க வேண்டிய தேவை என்ன? நடப்பது அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அல்லவா? என ஜோதிமணி எம்.பி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ தனித்தனியே சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, சி.டி.ரவி ஆகியோர் உடனிருந்தனர். இந்த […]
சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என ஜோதிமணி எம்.பி ட்வீட். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான், அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், ராஜீவ் காந்தி என்ன […]
ஜீவ் அன்பின் உருவம்,ஆளுமையின் வடிவம்,இந்தியாவின் பெருமை. இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல.தேசத்திற்கும் தான் என ஜோதிமணி எம்.பி ட்வீட். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மழைத்தூவி மரியாதை செலுத்தினர். இந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்றைய நவீன,தொழில்நுட்ப இந்தியா ராஜீவின் கனவு,தொலைநோக்கு.ராஜீவ் அன்பின் உருவம்,ஆளுமையின் வடிவம்,இந்தியாவின் பெருமை. இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல.தேசத்திற்கும் தான். […]
அம்பேத்கருக்கு இணையாக மோடியை உயர்த்தி அவர் பேசுவதை வெறும் அரசியல் புரிதலற்ற நிலைப்பாடு என்று கடந்து போய்விட முடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் […]
பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் சார்ந்த விசயங்களை முன்னிறுத்தி பாஜக மக்களை முட்டாளாக்க முயற்சிசெய்கிறது. ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பதாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு கொள்ளையை மறைக்கவே ஹிஜாப்,அசைவஉணவு தடைபோன்ற மதம் […]
கோட்சேக்களின் வன்முறையை, வெறுப்பை, பிரிவினைவாதத்தை அகிம்சை, அன்பு, ஒற்றுமையால் வெல்லும். தேசப்பிதாவிற்கு என் அஞ்சலி என ஜோதிமணி எம்.பி ட்வீட். இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியடிகளை போற்றும் வண்ணம் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோட்சேக்களால் ஒருபோதும் காந்தியின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.அது இந்த தேசத்தோடு இரண்டறக் கலந்துவிட்டது.இந்த தேசம் […]
மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களே, எங்கள் வீரவரலாற்றை, விடுதலைப்போரில் எமது தலைவர்களின் மகத்தான பங்களிப்பை, தியாகத்தை நாங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்துவோம். உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட். இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு […]
பெண்களுக்கு அறிவு கிடையாது,அவர்கள் அடுப்பங்கரைக்கும்,பிள்ளைபெறவுமே லாயக்கு என நினைக்கும் பாஜக / ஆர் எஸ் எஸ் அரசிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? என ஜோதிமணி எம்.பி ட்வீட். பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மோடி அரசு அனுப்பியுள்ளது. அதில் 31 எம் பிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே பெண். இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெண்களின் திருமண வயதை […]
இந்தியா இருக்கும்வரை இந்திரா இருப்பார்.உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என ஜோதிமணி எம்.பி பதிவிட்டுள்ளார். உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி அவர்கள், போர் வெற்றி நாள் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. நாட்டுக்காக 32 துப்பாக்கி குண்டுகளை உடலில் தாங்கி உயிரிழந்த இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. உண்மையை கண்டு இந்த அரசு பயப்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தானை பிளந்து வங்கதேசத்தை உருவாக்கிய காளி இந்திரா.சீனா,கேரள […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு, ஜோதிமணி எம்.பி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு, முதல்வருக்கு, ஜோதிமணி எம்.பி […]