புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசுக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும், எதிர் கூட்டணிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவும் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில் லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்துள்ளார். லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்தால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் பெரும்பான்மை இழக்கும் என கூறப்படுகிறது.
சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை லட்சுமி நாராயணன் வழங்கினார்.