#BREAKING: நடமாடும் கொள்முதல் நிலையங்கள்..? தமிழக அரசு..!

நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் காக்க வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைவது குறித்து தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லை பாதுகாப்பாக கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் பணியாக இருக்க வேண்டும்.

விவசாயிகள் பாதிப்படையக் கூடாது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

தமிழகத்தில் 469 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகள் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து தூரத்திலிருக்கும் விவசாயம் பாதிப்படைய கூடாது, விவசாயிகள் வந்து செல்லும் போக்குவரத்து செலவினங்களும் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விளைநிலங்களுக்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி வழக்கை ஜூலை 15-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.