#BREAKING: மநீக- சமக -ஐஜேகே இன்று பேச்சுவார்த்தை..!

Talks will be held today between the Makkal Needhi Maiam, All India Samathuva Makkal Katchi and the Indhiya Jananayaga Katchi the alliance.

கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு மேல் கூட்டணி தொடர்பாக கமலஹாசனுடன் சமக தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற சமக பொதுக்குழு கூட்டத்தில் கமலஹாசனை  முதல்வர் வேட்பாளராக முன்மொழிவதாகவும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இணையும் என அறிவித்தார்.

பின்னர், இதுகுறித்து கூறிய கமல், இருவரும் கைகுலுக்கி கொண்டோம் என்பது உண்மை விரைவில் விரிவாக சொல்கிறோம் என கூறினார். மேலும், தன்னை முதல்வராக முன்மொழிந்த  சரத்குமாருக்கு நன்றி எனவும் கமலஹாசன் கூறியிருந்தார்.