ஜூலை 9ம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம்!கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ! சித்தராமையா எச்சரிக்கை

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும். இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  சித்தராமையா  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,  கர்நாடக காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் கூட்டம் ஜூலை 9ம் தேதி நடைபெறும் என்றும்  கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத எம்.எல்.ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.