உயிரிழந்த கே.பி.பி.சாமி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

கே.பி.பி. சாமி கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த உள்ளார். இந்நிலையில் இன்று காலை  அவரது வீட்டிலேயே மரணமடைந்தார்.

கே.பி.பி. சாமி கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த உள்ளார். இந்நிலையில் இன்று காலை  அவரது வீட்டிலேயே மரணமடைந்தார்.

இவர் கடந்த 2006-ஆண்டு திமுக ஆட்சியில் மாநில மீன்வளத் துறை அமைச்சராக இருந்தார். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார்.பின்னர் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவொற்றியூர் தொகுதி போட்டியிட்ட வெற்றி பெற்றார்.

அவரது மகள் திருமணமாகி ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால் அவர் வந்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அஞ்சலி செலுத்தினர்.மேலும்  எம்எல்ஏ கே.பி.பி.சாமி மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.