நாளை முதலமைச்சராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்...! தலைமை செயலகத்தில் தயாராகும் முதல்வர் அறை...!

With MK Stalin set to take over as chief minister tomorrow, the General Secretariat is well prepared.

நாளை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தலைமை செயலகம் சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே-2ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆளுநர் மாளிகையில், நாளை காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. கொரோனா அலை தீவிரமாக பரவி வருவதால், மிகக் குறைந்த அளவிலான நபர்கள் தான் இந்த விழாவில்  அனுமதிக்கப்படுகின்றனர். பதவியேற்பு விழாவுக்கு பின் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கருனாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவர்.

பின், தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின், முதலமைச்சருக்கான அறையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டு, முதல்வர்  அறையில், முதல் கையெழுத்திட உள்ளார். இதனையடுத்து, பொதுப்பணி துறையினர், முதல்வரின் அறையின் பெயர்பலகைகள் மாற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, மிகவும் சிறப்பான முறையில், தயார் செய்து வருகின்றனர்.