சங்கரய்யாவை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

தோழர் என்.சங்கரய்யா அவர்களை, தமிழக இளைஞர் நலன் - விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தோழர் என்.சங்கரய்யா அவர்களை, தமிழக இளைஞர் நலன் – விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை போது, புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ‘விடுதலைப் போராட்ட வீரரும், சி.பி.ஐ(எம்), முதுபெரும் தலைவருமான‌ தோழர் என்.சங்கரய்யா அவர்களை, தமிழக இளைஞர் நலன் – விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.