Udhayanidhi Stalin: ‘இந்தியா’ கூட்டணி வென்றால் சமையல் எரிவாயு விலை ரூ.500-க்கு விற்கப்படும் என அமைச்சர் உதயநிதி பேச்சு. தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அவர் பேசும் போது, “ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டு வரவில்லை. நீட் தேர்வால் இதுவரை 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கு மத்திய பாஜக […]
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ரூ.11.98 கோடி மதிப்பில் உள்ள சென்னை மாநகராட்சி சார்பில் நிறைவுற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்ததோடு, ரூ.152.67 கோடி மதிப்பில் உள்ள சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இந்த விழாவில் கலந்து […]
நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அந்த கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை முடித்துவிட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் எனவும் நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். ஊழல் மலிந்த கலாச்சாரம், சாதிமத பேதங்கள் பிளவுவாத […]
கேலோ இந்திய விளையாட்டுப் போட்டிக்கான அழைப்பிதழை வாங்க இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செய்து வருகிறது. கேலோ இந்திய விளையாட்டு போட்டி ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் […]
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், மழை தெண்ணீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..! அதனபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்பது நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா போல சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்தது. உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டன. பெண்களே வாருங்கள் […]
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..! இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் அமைச்சர் உதயநிதி, குடியரசு தலைவர், ஆளுநரின் […]
சென்னை மெரினா கடற்கரையில் தினமும் தங்களது பொழுதை போக்குவதற்காக மக்கள் கூடுவது வழக்கம். பொதுமக்களுக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகளை கடற்கரையை ரசிக்கும் வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக மெரினா கடற்கரையில் காவல்துறை தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி […]
அமைச்சர் உதயநிதியிடம் பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்த சிறுமிகள். அமைச்சர் உதயநிதி, சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி பக்கத்தில், ‘சிவகங்கை சிறுகூடல்பட்டி பெரியார் சமத்துவபுரம் ஆய்வின்போது, ஹாசினி-ஜெசிந்தா ஆகிய சிறுமிகள் அப்பகுதியில் பூங்கா வேண்டும் என என்னிடம் கோரிக்கைவைத்த நிலையில், பூங்கா அமைக்க ரூ.14லட்சம் ஒதுக்கி நேற்று முன்தினமே நிர்வாக அனுமதி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சிவகங்கை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அப்போது திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் உதயநிதி ஸ்டாலின் சென்று காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும், அவரே, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். மேலும், கல்வி அதிகாரிகளிடம் பள்ளி […]
கரூர் மாவட்ட கவுன்சிலர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். கடந்த தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் புதியதாக விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அண்மையில், கரூரில், கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 36வது வார்டு கவுன்சிலர் வசுமதி, கரூர் மாநகராட்சியில் ஒரு தெருவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை வைக்க தீர்மானம் […]
தோழர் என்.சங்கரய்யா அவர்களை, தமிழக இளைஞர் நலன் – விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த 14-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 அமைச்சர்களின் இலகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை போது, புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு […]