டெல்லியில் இருந்து புறப்பட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

Union Minister Rajnath Singh left Delhi Airport for Tamil Nadu.

டெல்லி விமானநிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் புறப்பட்டார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பாஜக தனது பலத்தை நிரூபிக்க அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வருகை தருகின்றனர்.

இன்று சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட ராஜ்நாத் சிங் பிற்பகல் 1.45க்கு, சேலம் விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர், தனியார் விடுதியில்  ஓய்வு எடுத்த பின் மாலை 4 மணிக்கு விழாவில் கலந்துகொள்ள உள்ளர்.