சென்னை : திமுக – பாஜக இடையே ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமையன்று கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என […]
சென்னை : தமிழக புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது முதல், பிரதமர் மோடி ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தது வரையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம். கலைஞர் 100 நாணயம் : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் நாணயத்தை நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். புதிய தலைமைச் செயலாளர் […]
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22இல் தொடங்கப்பட்டது. ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று நிறைவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , குறிப்பிட்ட தேதிக்கு முன்னராகவே நேற்று (ஆகஸ்ட் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரண்டு […]
ஒடிசா: 5000 கிமீ தூரம் வரையில் துல்லியமாக இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நேற்று (ஜூலை 24) ஒடிசாவில் பாலிஸ்டிக் ஏவுகணை 2ஆம் கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்காக DRDOவை வாழ்த்தியுள்ளார். இந்த சோதனையானது நமது பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு திறனை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் […]
டெல்லி: நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA தலைமையிலான ஆட்சி நடபெற்று வருகிறது. இதனால், […]
ஜம்மு காஷ்மீர்: இந்திய ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பத்னோட்டா பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுப்பட்டு வந்திருந்த போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் கொண்டும், துப்பாக்கி மூலமும் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இருந்தும், பயங்கரவாதிகளின் திடீர் […]
மகாராஷ்டிரா: பணியின் போது உயிரிழந்த அக்னிவீரரின் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் 1.08 கோடி ரூபாய் நிவாரணம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நிகழ்ந்த மக்களவை கூட்டத்தொடரில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, இந்துக்கள், பாஜக என பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டு விமர்சனம் செய்து இருந்தார். மேலும், நீட் தேர்வு முறைகேடு, அக்னிவீரர் திட்டம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மத்திய அரசு அக்னிவீரர் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எரிந்து (Use and […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. நேற்றும் இன்றும் புதிய எம்பிக்கள் பதவியேற்பு நடைபெற்று முடிந்த பின்னர் நாளை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி தேர்தல் தவிர்த்து ஒரேமனதாக சபாநாயகரை தேர்வு செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார். சபாநாயகர் தேர்வு […]
ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார். சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங், நாளை […]
டெல்லி: மக்களவை சபாநாயகர் யார் என்பது குறித்த ஆலோசனையை பாஜக, NDA கூட்டணி கட்சிகளுடன் வரும் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற முக்கிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும், மக்களவை சபாநாயகர் யார் என்று அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் […]
மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்களின் கள நிலவரத்தை பற்றி பாப்போம். அமித் ஷா : குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் பாஜக சார்பாக போட்டியிட்ட இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 8,58,197 வாக்குகள் பெற்று 6,50,399 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோனல் ராமன்பாய் படேலை விட […]
நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் மக்களவைக்குள் குதித்தனர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர்கள் மறைத்து வைத்து இருந்த வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு இளைஞர் என இருவர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி பன்மடங்கு அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.! நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நேற்றே நாடாளுமன்ற […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தெங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் மத்திய, மாநில பேரிடர் […]
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல்(Michaung cyclone) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது. மழைவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு மின்சாரம், உணவு உள்ளிட்ட […]
தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் […]
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 முதல் 17 ஆம் தேதி வரை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் (ADMM-Plus) ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா குடியரசு, ரஷ்யா மற்றும் […]
டிப்கனெக்ட் 2.0 எனும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு துறைகளை மேம்படுத்த வேண்டும். எனவே நாம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல் நாம் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது பயனற்றதாகிவிடும். ஒவ்வொரு முறையும் ஏற்படக்கூடிய புதிய ஆபத்துகள் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இன்னும் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்தது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை தற்செயலாக வீசப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் நடந்ததாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை குறித்து மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் விளக்கமளித்தார். அதில், கடந்த 9ஆம் தேதி ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஏவுகணை வழக்கமான பராமரிப்பு மற்றும் ஆய்வின் போது காலை 7 மணியளவில் ஒரு ஏவுகணை தவறுதலாக சீறிப்பாய்ந்தது. அந்த ஏவுகணை பாகிஸ்தானின் […]
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால், இன்று கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என தெரியவந்தது. இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். […]
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரைத் தாக்கியவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கர்னல் […]