நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..!

முதல்வரை சந்தித்து அமைச்சர் ரகுபதி “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

முதல்வரை சந்தித்து அமைச்சர் ரகுபதி “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.

நேற்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தின் கீழ் அவர் பயின்ற பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதனை தொடர்ந்து,மாண்புமிகு அமைச்சர் ரகுபதிஅவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களை சந்தித்து, “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..!