Minister Ragupathy – தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு நடவடிகக்கைகள் குறித்தும் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் இன்று நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், தமிழகத்தில், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 2019ஆம் ஆண்டு 11,418 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2020இல் 15,144 கிலோ கஞ்சா, 2021இல் 20,431 கிலோ கஞ்சா, 2022இல் 28,381 கிலோ கஞ்சா, 2023இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் […]
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியார் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார் ஆளுநர். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயமாக […]
முதல்வரை சந்தித்து அமைச்சர் ரகுபதி “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. நேற்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தின் கீழ் […]
அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்தில் 8 உயிர்கள் பலியாகி உள்ளதற்க்கு திமுக அரசு தான் காரணம். – அண்ணாமலை குற்றசாட்டு. ஆளும் திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் இயற்றி இருந்தது. அதற்கு ஆளுநர் ரவி கையெழுத்திட்டார். அதற்கான அரசாணையை தமிழக பிறப்பிக்கவில்லை . அதர்க்கடுத்ததாக, சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டமாக இயற்றியது. இதற்கு இன்னும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை. இந்த சட்டம் குறித்து ஆளுநர் ரவி […]
அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். […]
மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் என சிபிஐ(எம்) வலியுறுத்தல். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரத்தில் பதில் அளித்திருந்தது. இதற்கிடையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்காக தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டம் காலாவதியானது. […]
தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும் என அண்ணாமலை ட்விட். சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன். ஆளுநரை சந்தித்து அரை மணி நேரத்திற்கு மேல் மசோதா குறித்து விளக்கப்பட்டது. […]
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தந்தால் உடனடியாக இச்சட்டம் அமல்படுத்தப்படும் அமைச்சர் ரகுபதி பேட்டி. சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பான விளக்கங்களை ஆளுநருக்கு அளித்துள்ளேன். ஆளுநரை சந்தித்து அரை மணி நேரத்திற்கு மேல் மசோதா குறித்து விளக்கப்பட்டது. ஆஃப்லைனில் விளையாடுவதற்கும் ஆன்லைனில் விளையாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆப்லைனில் […]
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி சந்தித்து பேசி வருகிறார். கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 […]
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறார். கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம் மசோதா தொடர்பாக சில விளக்கங்களை தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்திற்கு தமிழக அரசு 24 […]
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி. அமைச்சர் ரகுபதி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அனுமதி கோருவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இன்று அல்லாது நாளைக்குள் ஆளுநரை சிந்திப்போம். அப்போது ஆன்லைன் ரம்மி தடை […]
தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் பேர் இருக்கின்றனர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், தமிழக்தில் இயங்கி வரும் சட்டக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையி னை விட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிட்டார். மேலும், பெண்கள் சட்டப்படிப்பு மிகவும் பாதுகாப்பானது. சட்டப்படிப்பு படிப்பதால், அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டு பேசினார்.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு […]
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். […]
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டமசோதா கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி பேட்டி. ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் பண இழப்பு காரணமாக, பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனனர். இதனை தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு […]
திமுக ஒரு மனிதாபிமான அடிப்படையிலே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது என அமைச்சர் ரகுபதி பேச்சு. புதுக்கோட்டையில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் தியாகி என நாங்கள் கூறவில்லை. திமுக ஒரு மனிதாபிமான அடிப்படையிலே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. அவரின் தாயாரின் போராட்டத்தின் பலனாக மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை […]
நீதிமன்ற பணி கேட்டு யாரும் வர வேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வீட்டின் முன் போஸ்டர் ஒட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது உயர்நீதிமன்றம் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. இதனையடுத்து தேர்வு முடிந்தபின் சிலர் அமைச்சர்களிடம் சிபாரிசு கேட்டு பணியில் சேர்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் தனது வீட்டில் நீதிமன்ற […]