சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி அதிரடி ஆய்வு...!

Bond Registration Minister Murthy has conducted an action inspection at the office of the Registrar of Saidapet who went out without a seat during working hours.

பணி நேரத்தில் இருக்கையில் இல்லாமல் வெளியே சென்ற சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தமிழகம் முழுவதுமுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள பத்திரப்பதிவு துறை தலைவர் அலுவலகத்திற்கு சென்று சென்றுள்ளார். அங்கு தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் சிசிடிவிகளின் கட்டுப்பட்டு அறை உள்ளது.

அந்த அறைக்குள் சென்று தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது சைதாப்பேட்டை சார் பதிவாளர் இருக்கை காலியாக இருந்ததுடன், அங்கு மக்கள் அவருக்காக கூட்டமாக காத்திருந்துள்ளனர். உடனடியாக அமைச்சர் மூர்த்தி சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்று சார் பதிவாளர் செந்தூர் பாண்டியன் எங்கே என அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழியர்கள் இப்பொழுது தான் அவர் வெளியே சென்றார் என கூறியதால் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது சார் பதிவாளர் செந்தூர் காலையில் பணிக்கு வந்து சில நிமிடங்களிலேயே வெளியில் கிளம்பியது தெரிய வந்துள்ளது. எனவே, மக்கள் கூட்டமாக காத்திருக்கும் நேரத்தில் இருக்கையில் இல்லாமல் வெளியே சென்ற சார் பதிவாளர் செந்தூர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.