மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

Minister Ma Subramaniam said that the vaccination work for the culprits in the marina has been started from this morning.

மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர்  வெளியிட்டுள்ள பதிவில், மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர். இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம். அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர் ” எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள், எங்களூரான மகாராஷ்ட்ராவில் உள்ளவர்கள் எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும் என கூறியதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node