#Breaking:தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

Minister Chakrapani has announced that 500 kalaignar restaurants will be set up in Tamil Nadu.

தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக500இடங்களில்கலைஞர்உணவகங்கள்தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் போன்று கூடுதலாக “500 கலைஞர் உணவகங்கள்” விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#Breaking:தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!