தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டமானது சோதனையில் இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி,நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:செங்கல்பட்டு,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 169 இடங்களில் நேரடி […]
திருவாரூர்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,தற்போது கொரோனா பரவல் முன்பை விட ஓரளவுக்கு குறைந்துள்ளது. இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வேளையில்,தமிழகத்தில் இனி கொரோனா […]
தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். இந்நிலையில்,தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் போன்று கூடுதலாக “500 கலைஞர் உணவகங்கள்” விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அறிவித்துள்ளார். ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய அமைச்சர் […]