பாஜக சார்பில், 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.