விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை

Meeting between CM Arvind Kejriwal and farmer leaders from Uttar Pradesh underway at Vidhan Sabha

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை  நடத்தி வருகிறார்.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 3 மாதத்திற்கு மேலாக விவசாய அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு தரப்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது.தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு விதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விதான் சபையில் விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் தொடர்பான பிற பிரச்சினைகள் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.