"அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது" – வருத்ததுடன் முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மனைவியும்,உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் தாயாருமான மீனா சுவாமிநாதன்

வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன்அவர்களின் மனைவியும்,உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் தாயாருமானமீனாசுவாமிநாதன்உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று, உடல்நலக்குறைவால் காலமானஎம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின்மனைவி திருமதி மீனா சுவாமிநாதன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில்,சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய மீனா சுவாமிநாதன் அவர்களின்  மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று கூறி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான,இரங்கல் அறிக்கையில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“வேளாண் ஆய்வறிஞர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது வாழ்க்கைத் துணைவியார் திரு மிகு. மீனா சுவாமிநாதன் அவர்களது மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன்.

சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது.அவரது மறைவால் வாடும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

unknown node