வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மனைவியும்,உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அவர்களின் தாயாருமான மீனா சுவாமிநாதன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று, உடல்நலக்குறைவால் காலமான எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மனைவி திருமதி மீனா சுவாமிநாதன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில்,சிறந்த கல்வியாளராகவும் பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய மீனா சுவாமிநாதன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று கூறி முதல்வர் ஸ்டாலின் […]