#BREAKING: நாளை மறுநாள் 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதிவியேற்கிறார்..!

மம்தா பானர்ஜி வரும் 5-ஆம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார்.

மம்தா பானர்ஜி வரும் 5-ஆம் தேதி அம்மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில்திரிணாமூல்  காங்கிரஸ் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து, இன்று அந்த கட்சியின் சார்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஒருமனதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக மம்தா பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநரிடம்  இன்று இரவு 7 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி. இதனால் மே 5-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மேற்குவங்க மாநில முதல்வராக மூன்றாவது முறையாக தப்பா நினைச்சு பதவியேற்கிறார்.

நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி எப்படி முதல்வராக பதவியேற்க முடியும் என்ற கேள்விகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால் சட்டத்தில் அதற்கான வழிவகை உள்ளது. அரசியல் சாசன சட்டம் 146 உட்பிரிவின் 4-ன் கீழ் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் 6 மாதம் அமைச்சர் பதவியில் இருக்க முடியும்.

அதன் பிறகு அவர் இடைத்தேர்தல் அல்லது நேரடி தேர்தலை சந்தித்து அவர் மீண்டும்  வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராகவே அல்லது வேறு எந்த அமைச்சரகவே  தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: நாளை மறுநாள் 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதிவியேற்கிறார்..!