சற்று நேரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்..!

The first public meeting of the Makkal Needhi Maiam is scheduled to begin at 10 am at the Srivaru Wedding Hall in Vanakaram.

காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது.

தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இக்கூட்டம்  நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். ஏற்கனவே முதல்வா் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டாலும், தோ்தல்  கூட்டணி குறித்து கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வருகின்ற 21-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.