நாடாளுமன்றத்தில் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க என குறிப்பிட்ட M.P விஜய் வசந்த்..!

Speaker Ombirla administered the oath of office to Lok Sabha member Vijay Vasant.

மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த்திற்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

2019 நாடாளுமன்றத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். பின்னர், அத்தொகுதிக்கு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார். இன்று காலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்தொடங்கியது. அப்போது மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த்திற்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுகொண்டார். பதவியேற்றபின் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க என்று குறிப்பிட்டார்.