மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம் -எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி

At the MGR memorial Today , the dignitaries paid their respects and accepted the Pledge in aiadmk party members.

எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய நிலையில் உறுதி மொழியும் ஏற்றுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமி,அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.இதன் பின்பு அதிமுகவினர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.அந்த உறுதி மொழியில், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம்.வெட்டி வா என்றால், கட்டி வரும் கடமை வீரர்களாக கழக உடன்பிறப்புகள், சிங்கமென தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம்.

தேர்தல் களத்தில் சீறிப் பாய்வோம் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி, ஜெயலலிதாவின் நல்லாட்சி, விசுவாசத் தொண்டர்களின் நேர்மையான ஆட்சி மீண்டும் மலர பாடுபடுவோம்.மக்கள்தான் எஜமானர்கள் என்று நினைக்கும் அம்மாவின் ஆட்சி, மீண்டும் மலர ஒற்றுமையுடன் பாடுபடுவோம்.சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம், எதிரிகளின் பொய் முகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவோம் என உளமார உறுதி ஏற்போம்.