ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் என மநீம அறிக்கை.
திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது.
தற்போது அந்தப் பணி முடிந்த நிலையில், அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் என தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
unknown node